வங்கக் கடலில் மிக்ஜாம்புயல் ஏற்படுகிறது. தெற்கு பகுதி அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29ஆம் தேதி வலுப்பெறலாம் என்று வானிலை தகவல் மையம் அறிவித்துள்ளது .
தாழ்வு மண்டலமானது அன்றே புயலாக வலுப்பெற வாய்ப்பு வங்கக்கடலின் தென்கிழக்கு திசையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புயலுக்கு மியான்மர் அளித்துள்ள பெயர் மிக்ஜாம் புயல் ஆகும். மேலும் இந்த புயலானது தென்பகுதி வங்கக் கடலில் டிசம்பர் 1ஆம் தேதி புயலாக வலுப்பெறலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலின் காற்றின் வேகம் இன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஐந்து நாட்கள் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.