இங்கிலாந்து சுகாதார துறைக்குப் புதிய நெருக்கடி. உலகில் பொருளியல் நெருக்கடி காரணம், விலைவாசி உயர்வு போன்ற காரணத்தால் செவிலியர்கள், அவர்கள் சம்பளத்தை உயர்த்தி தருமாறு கேட்டு இருந்தனர்.
ஆனால் இதனை அரசு பொருட்படுத்தவில்லை என்று இங்கிலாந்தின் முக்கிய செவிலியர் தொழிற்சங்கம் தெரிவித்தது. இதனால் இவர்கள் வேலை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இங்கிலாந்து மணி நேரப்படி இரவு 8.30 மணி வரை வேலை செய்யப் பட மாட்டாது என்று அவர்கள் தெரிவித்தனர். மறுநாளும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் நூறாண்டில் முதல்முறையாக இப்போராட்டம் நடைபெறுகிறது.கடந்த மாதத்திலிருந்து போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் சுகாதார துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நோயாளிகளை கவனிக்க முடியாமல் தினறும் சுகாதார துறை . ஐரோப்பா முழுவதும் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக போராட்டங்களைத் தொடங்க ஆரம்பித்து வைத்திருக்கிறது.