சிங்கப்பூரில் சுகாதார பராமரிப்புத் துறை ஊழியர்களுக்காக மேலும் சிறந்த தரநிலைகளும் நடைமுறைகளும் அறிமுகமாக உள்ளன.
அவர்களுடைய மனநலத்தைப் பாதுகாக்கும் வகையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தது.அவர்களுக்காக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய வேலையிடப் பாதுகாப்பிலும்,சுகாதார வழிகாட்டி முறையிலும் மாற்றப்பட்ட மாற்றங்களும் அதில் அடங்கும். சுகாதார பராமரிப்பு துறை ஊழியர்களுக்கு அளவுக்கு அதிகப்படியான வேலைச் சுமை இருக்கும்.
அதே போல் அவர்களின் சுழற்சி முறை வேலையானது நீண்ட நேரம் நீடிப்பது போன்ற பிரச்சனைகளில் புதிய வழிகாட்டி முறை கவனம் செலுத்தவும்.ஊழியர்களுக்கு வேலைத் தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் போது அதற்கென ஆலோசனச் சேவையும் ஆதரவு கிடைக்கவும் உதவும்.
ஊழியர்களுக்காக விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. வேலையிடச் சுகாதாரம்,பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு போன்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தது. தொற்று நோய்களையும், ஆபத்தான பொருட்களை கையாளும் ஊழியர்களுக்காக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் பாதுகாப்பு கருதி மேலும் தரநிலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார பராமரிப்பு துறையில் உள்ள ஊழியர்கள் கடந்த ஈராண்டுகளில் கடுமையான காயம் நேர்ந்த சம்பவங்களும் அதிகரித்துள்ளது.சம்பவங்கள் 11இல் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளது.