சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கல்வி துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதை அறிவித்தார்.இந்த புதிய மாற்றங்கள் மாணவர்களின் சிந்தனை திறன்களை மேலும் வளர்ப்பதற்கு உதவும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்தது. பொதுக் கல்வி சான்றிதழ் மேல்நிலைத் தேர்வுக்கான தற்போதைய பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதேபோல், பல்கலைக்கழக சேர்க்கை அனுமதியிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.இதனைக் கல்வி அமைச்சர் சான் சுங் சிங் அறிவித்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் Project Work(PW) எனப்படும் ஒப்படைப்பு திட்டமானது, தேர்ச்சி அல்லது தோல்வி அடிப்படை முறையில் மதிப்பிடப்படும்.
2026-ஆம் ஆண்டிலிருந்து மாணவர்கள் சுயேச்சைப் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெற PW இல் தேர்ச்சி பெற வேண்டும்.
2026-ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழக அனுமதி கணக்கீட்டுக்கான (UAS) அதிகபட்ச புள்ளி குறைக்கப்படும்.தற்போது,90 புள்ளியாக இருக்கிறது அதனை 70 புள்ளியாக குறைக்கப்படும் என்று தெரிவித்தது.
அதேபோல், பொதுத் தாளும் (GP) மூன்று பாடங்களாக கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தது. நான்காவது படம் சேர்க்க அது UAS கணக்கீட்டை மேம்படுத்தும் என்றால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படும்.
அடுத்த ஆண்டிலிருந்து தொடக்கக் கல்லூரியிலும்,Millennia கல்வி நிலையத்திலும் அரையாண்டு தேர்வுகள் படிப்படியாக நீக்கப்படும். இவற்றுக்குப் பதிலாக பள்ளிகள் கூடுதல் தேர்வுகளை நடத்தாது.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தவணையில் ஒரேயொரு முறை சார்ந்த மதிப்பீடு வழங்கப்படும். இந்த முறை சார்ந்த மதிப்பீட்டில் கிடைக்கும் மதிப்பெண்களை அடுத்த நிலைக்குச் செல்வதற்கான கணக்கில் எடுத்துக்கப்படும் என்று அறிவித்தது.