சிங்கப்பூரில் புதிய மாற்றம்!! சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்!!

சிங்கப்பூரில் புதிய மாற்றம்!! சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்!!

சிங்கப்பூருக்கு வருகைத் தரும் அனைத்து வெளிநாட்டவர்களும் சாங்கி விமான நிலையத்தில் தானியங்கி பாதைகளை இனி பயன்படுத்தலாம்.

இந்த புதிய நடைமுறை இந்த மாதத்திலிருந்து அமலுக்கு வரும். இந்த தகவலை குடிநுழைவு,சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வெளிநாட்டவர்கள் SG Arrival Card – ஐ மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்குமுன் தானியக்கப் பாதைகளை சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள்,60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் தானியக்க பாதைகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

குடிநுழைவுச் சோதனைகளை முடிக்க அனைவரும் அந்த வழியை இனி பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநுழைவுச் சோதனைகளைப் பயணிகள் விரைவாக முடிப்பதற்கு இந்த புதிய நடைமுறை உதவும் என்று கருதப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து சாங்கி விமான நிலையம், சிலேத்தார் விமான நிலையம், மரினா பே படகு நிலையம் வழியாக செல்லும் பயணிகள் மற்றும் இங்கு வரும் குடியிருப்பாளர்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டிய தேவையில்லை. இந்த நடைமுறை இவ்வாண்டு இறுதியில் அமலுக்கு வரும் என்றும் ஆணையம் தெரிவித்தது.