மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து துவாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.
இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது.இனிமேல்,கூட்ட நெரிசல் இல்லாத வேளைகளில் வாகனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை,இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெரிசலற்ற நேரம்.
தற்போது நெரிசலற்ற நேரங்களில் வாகனப் பிரிவைப் பொறுத்து பயணம் செய்யும் போது 80 காசு முதல் $9.30 வெள்ளி வரை கட்டணத்தில் கழிக்கப் படுகிறது.
இந்த மாற்றம் மலேசியாவின் சாலைக் கட்டணங்களுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
மலேசியாவில் உள்ள Tanjung Kupang கட்டண நுழைவாயிலை நெரிசலற்ற நேரங்களில் கடக்கும் வாகனங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட கட்டண கழிவு அகற்றப்பட்டன.இந்த மாற்றம் மார்ச் மாதம் முதல் தேதியிலேயே அகற்றப்பட்டன.