சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு உதவு புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சனை ,காயம் மற்றும் பிற வகை சட்டரீதியான உதவிக்கும் அவர்கள் அந்த நிலையத்தை அணுகலாம்.

அந்த புதிய நிலையம் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ளது.அங்கு முழுநேரமாக வழக்கறிஞர் மற்றும் தொண்டூழியர்கள் சேவை வழங்குவர்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இலவச சட்ட உதவி வழங்கும் அமைப்பான Pro Bono SG ஆகியவற்றால் இந்த நிலையம் தொடங்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள் சட்டச் சேவைகளை எளிதாக அணுகுவதற்கு வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் குழுக்கள் கேட்டுக்கொண்டிருந்தது.இந்த நிலையில் இந்த புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.