சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய மசோதா நிறைவேற்றம்!! எப்போது அமலுக்கு வரும்!!

சிங்கப்பூரில் ஊழியர் பாகுபாட்டுக்கு எதிரான முக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த புதிய சட்டம் ஜனவரி 8 ஆம் தேதி (நேற்று) நிறைவேற்றப்பட்டது.

புதிய பாகுபாட்டுக்கு எதிரான சட்டம் என்று அழைக்கப்படுவது எளிதானது என்றாலும் சரியான சமநிலையில் ஒரு மசோதாவை உருவாக்குவது சிக்கலானது மற்றும் சவாலானது என்று அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இது தொடர்பான விவாதத்தில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பங்கேற்று பேசினார்.அனைத்து பிரச்னைகளையும் அரசாங்கத்தால் ஒரே இரவில் தீர்த்து விட முடியாது என்று கூறினார்.

மேலும் பல பிரிவுகளின் ஊழியர்கள் சேர்க்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது .

இருப்பினும் உறுப்பினர்கள் வேலையிட நடைமுறை மசோதாவுக்கு ஒரு மனதாக ஆதரவளித்தார்கள்.

மேலும் மசோதாவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் யோசனைகளை முன்வைத்தனர்.

இது ஒரு ஆரம்பம் தான் என்று மனிதவள அமைச்சர் டான் சி லெங் பதில் தந்தார்.


வேலையிட நியாய நடைமுறைச் சட்டமானது அடுத்த ஆண்டு (2026) அல்லது 2027 ஆம் ஆண்டு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.