சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், அதன் துணை நிறுவனமான ஸ்கூட்டும் ஓர் அறிவிப்பை நேற்று (மே-29) CNA-யிடம் தெரிவித்துள்ளது.
விமான ஊழியர்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை.
முகக்கவசம் அணிய தேவைப்படாத நிலையிலும் விமான ஊழியர்களின் நலன் காக்கப்படும் என்று கூறியிருக்கின்றன.
“அனைத்து SIA, Scoot விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் விமான சேவையின்போது முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் செல்லுமிடத்தில் தேவைப்படாவிட்டால் அவர்கள் அதை அணிவது கட்டாயமில்லை´´ என்று இரு நிறுவனங்களும் தெரிவித்தன.
இருப்பினும்,பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தன.
விமான ஊழியர்கள் தொடர்ந்து வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
அவர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய விருப்பப்பட்டால் அணியலாம் என்று அந்நிறுவனங்கள் கூறியது.