ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!!

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!!

ஜப்பானில் நெடுஞ்சாலையின் நடுவில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக இரண்டு சீனப் பெண்கள் நெட்டிசன்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

தோக்கியோ மற்றும் ஃபுஜி மலைக்கு இடையிலான நெடுஞ்சாலையில் வரிசையாக நிற்கும் கார்களுக்கு நடுவில் அந்தப் பெண்கள் படுத்தவாரும்,உட்கார்ந்தவாரும் மது அருந்துவது இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக நெடுஞ்சாலை மூடப்பட்டது.

அப்பகுதி சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இந்தச் சூழலில்தான் அந்தப் பெண்கள் இப்படி ஒரு அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

நெட்டிசன்கள் அவர்களைக் கண்டித்து, அவர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துகளை பதிவிட்டனர்.