சிங்கப்பூரில் அதிகரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் கட்டணத்தின் விலை..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நெட்ஃபிளிக்ஸ் வீடியோ சேவையைப் பயன்படுத்த இனி மாதத்திற்கு 2 முதல் 4 வெள்ளி வரை கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
இது கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஒரு திரையில் மட்டும் பார்க்க $15.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 2 திரைகளில் பார்க்க $22.98 கட்டணமும், ஒரே நேரத்தில் 4 திரைகளில் பார்க்க $29.98 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் விலையை உயர்த்தியது.
அப்போதும் கூட கட்டணம் 2 முதல் 4 வெள்ளி வரை உயர்த்தப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது.
நெட்ஃபிக்ஸ் 2016 இல் சிங்கப்பூருக்கு வந்தது.அதன் பின்னர், கட்டணங்கள் 4 முறை மாற்றப்பட்டுள்ளன.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan