தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு...!!!

வெயில் காலம் வந்து விட்டாலே தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் வெயிலுக்குச் சென்று வந்தவுடன் படர்தாமரை போன்ற எரிச்சல் ஊட்டும் அரிப்புகள் சிலருக்கு வருவதுண்டு. இதற்கு நாம் வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி பிரச்சனைகளை சரி செய்யலாம்.தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான தேமல், பதர் தாமரை போன்றவற்றை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றி பயனடையலாம்.
தேவையான பொருட்கள்:-
✨️ பூண்டு பற்கள் – நான்கு
✨️ தேங்காய் எண்ணெய் – ஐந்து தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
👉 முதலில், நான்கு பூண்டு பற்களை எடுத்து, பின்னர் தோலை நீக்கி, பூண்டு பற்களை உரலில் போட்டு தட்டி எடுக்கவும்.
👉 அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, ஐந்து தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைச் சேர்த்து சூடாக்கவும்.
👉 பின்னர் பூண்டு பற்களைச் சேர்த்து கொதிக்க விடவும்.
👉 பின்னர் அடுப்பை அணைத்து, பூண்டு எண்ணெயை நன்றாக ஆற விடவும்.
👉 பின்னர் எண்ணெயிலிருந்து பூண்டு பற்களை நீக்கி ஒரு பாட்டிலில் வடிகட்டவும்.
👉 இந்த எண்ணெயை சொறி மற்றும் அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
✨️ வேப்ப இலைகள் – ஒரு கைப்பிடி
✨️ மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
✨️ சுத்தமான தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
👉 ஒரு கைப்பிடி வேப்ப இலைகளை நன்கு உலர்த்தி, மிக்ஸி ஜாடியில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும்.
👉 பிறகு, இந்த வேப்பம் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் போடவும்
👉 பின்னர் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலக்கவும்.
👉 இந்த பேஸ்ட்டை புண்கள் மற்றும் கொப்புளங்களில் தடவினால், அவை சில வாரங்களில் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
✨️ குப்பைமணி இலைப் பொடி – ஒரு டீஸ்பூன்
✨️ தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:-
👉 ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் குப்பைமேனி இலைப் பொடியைச் சேர்க்கவும்.
👉,அடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
👉 பின்னர் இந்த பேஸ்ட்டை தேமல், பதார் தாமரை போன்ற பாதிப்புகள் உள்ள இடத்தில் தடவினால் அவை விரைவில் மறைந்துவிடும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan