வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!!

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் நேச்சுரல் ஹேர் டை..!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இளம் வயதிலேயே நரை முடி வந்து விட்டது. இதற்காக முடியை கருமை நிறம் ஆக்க கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஹேர் டைகளை வாங்கி உபயோகித்து அதனால் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுவதுண்டு. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் இயற்கையாகவே ஹேர் டையை தயாரிக்கலாம். உங்கள் தலைமுடியை கருமையாக்கும் ஹேர் டையை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

✨️ தேயிலை தூள் – 3 தேக்கரண்டி

✨️ மருதாணி பொடி – 2 தேக்கரண்டி

✨️ நீலி அவுரி பொடி – 2 தேக்கரண்டி

✨️ ஆப்பிள் சீடர் வினிகர் – 1 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

👉முதலில் ஒரு அடி கனமான இரும்பு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் மூன்று தேக்கரண்டி தேயிலைத் தூளைச் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

👉தேயிலைத் தூள் நன்றாக கொதித்ததும், அடுப்பை அணைக்கவும்.

👉பின்னர் இந்த தேநீர் தூள் பானத்தை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி, நன்றாக ஆறிய பிறகு, இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி நீல அவுரி பொடிச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

👉பின்னர், அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.


👉இந்த சாயத்தை நான்கு முதல் ஐந்து மணி நேரம் நன்றாக ஊறவைத்த பிறகு பயன்படுத்தலாம்.

👉அதற்கு முன், உங்கள் தலையில் தண்ணீரை ஊற்றி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு, தயாரிக்கப்பட்ட ஹேர் டையை உங்கள் தலை முழுவதும் தடவி, அதை ஊற விடவும்.

👉அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி தலையைக் கழுவவும். இப்படிச் செய்தால் வெள்ளை முடி கருப்பாக மாறும்.

இதே செய்முறையை ஆப்பிள் சீடர் வினிகருக்கு பதில் எலுமிச்சையைச் சேர்த்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

✨️ அவுரி இலைச்சாறு

✨️ கறிவேப்பிலைச் சாறு

✨️ மறுதோன்றி இலை சாறு

✨️ பீட்ரூட் சாறு

✨️ தேயிலைத் தூள்- இரண்டு தேக்கரண்டி

✨️ செம்பருத்தி பூ- 5 முதல் 10

செய்முறை விளக்கம்:

👉 ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் 5 முதல் 10 செம்பருத்தி பூவை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

👉 இது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

👉 பின்னர் இந்த கலவையை நன்றாக ஆற வைத்து தலையில் தேய்க்கவும்.

👉 ஒரு மணி நேரம் கழித்து லேசான ஷாம்புவை பயன்படுத்தி தலை முடியை கழுவினால் முடி கருமை நிறமாக மாறும்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan