மாணவர்கள் பயன்பெற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பு!!

மாணவர்கள் பயன்பெற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 80க்கும் மேற்பட்ட முதுகலை படிப்புகளுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையை வழங்கியுள்ளது.

இந்த கட்டணச் சலுகை அறிவிப்பானது பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் கற்றல் விழாவில் அறிவிக்கப்பட்டது.மேலும் இந்தச் சலுகை ஆனது ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்திட்டங்களுக்கு ஏற்கனவே அரசாங்கத்திடம் மானியம் பெற்றிருந்தால் அவர்கள் இந்த தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் இல்லை என்றும் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெறாத பாடத்திட்டங்கள் மட்டுமே இந்த கட்டண சலுகையை பெறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாய்ப்பை சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊழியர்கள் தங்கள் கல்வி மற்றும் பயிற்சியை தொடராததற்கு கட்டணம் முக்கிய காரணம் என்று பல்கலைக்கழகம் கண்டறிந்தது.

தேசிய பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு படிப்பின் முதல் நிலையை முடித்துள்ளதாகவும்,அடுத்த ஆண்டு AI துறையில் மேலும் நான்கு முதுநிலை பாடத்திட்டங்கள் தொடங்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் போட்டித்தன்மையுடன் இருக்க கல்வியாளர்களை அதிநவீன தொழில்நுட்பத்தில் ஈடுபடுமாறு கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Follow us on : click here ⬇️