சிங்கப்பூரில் சட்டவிரோதமாக இ-சிகெரட்டுகள் விற்பனை செய்த தேசிய சேவையாளர்!!

சிங்கப்பூரில் இ-சிகெரட்டுகள் மற்றும் அவற்றின் பாகங்களை சட்டவிரோதமாக பேக்கேஜிங் செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டை தேசிய சேவையாளரான Tan Teck Jin (21) ஒப்புக்கொண்டார்.

குத்துச்சண்டை பயிற்சி கட்டணங்களைச் செலுத்தவும்,தனது சொந்த செலவுக்காகவும் பகுதி நேரமாக அதில் ஈடுபட்டதாக அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் கூறினர்.

அதிகாரிகள் கிடங்கு ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது 130000 மின் சிகெரட்டுகள் மற்றும் 60000 க்கும் அதிகமான மின் சிகெரட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சோதனை நடத்திய போது டான் கைது செய்யப்பட்டார்.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 3.1 மில்லியன் வெள்ளி.

தான் செய்ததை நினைத்து அவர் வருந்துவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.எனவே, டானின் வழக்கறிஞர்கள் அவருக்கு நன்னடத்தை உத்தரவு விதிக்குமாறு கோரினர்.

அடுத்த மாதம் 5-ஆம் தேதி டானுக்கு தண்டனை விதிக்கப்படும்.