சிங்கப்பூரில் இவ்வாண்டு தேசிய குடும்ப வாரம் மேலும் பெரியளவில் இன்னும் சிறப்பாக நடைபெற உள்ளது.
அது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த முறை அதில் 100 க்கும் அதிகமான புதிய வர்த்தக,சமூகப் பங்காளிகள் இணைந்துள்ளன.
அதில் இணைந்துள்ள பங்குதாரர்களின் மொத்த எண்ணிக்கை 120 க்கும் அதிகம்.
தேசிய குடும்ப வாரத்தில் இலவச உணவு, செயல்பாடுகள் போன்றவை இடம்பெறும்.
இந்த முறை குழந்தைகளுக்கான விளையாட்டுகள்,குடும்பத்திற்கு ஏற்ற சவால்கள் மற்றும் தீவு முழுவதும் இருவழித் தொடர்பு சுற்றுப்பயணங்களை எதிர்பார்க்கலாம்.
வரும் 11-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அவர்கள் குடும்ப பிணைப்பை ஊக்குவிக்கவும்,தலைமுறைகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்தவும் முயல்கின்றனர்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் Masagos Zulkifli தேசிய குடும்ப வாரத்தைத் தொடங்கி வைத்தார்.
தனிநபர்களின் பண்புநலன்களை உருவாக்குவதில் குடும்பங்கள் உதவுகின்றன என்றார்.
குடும்ப வளர்ப்பின் மூலமே மீள்திறன்மிக்க நபர்கள் உருவாகிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.