ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்!

நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ` தசரா´ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது.

வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தற்போது நானி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.அவர் நடித்த அந்தே சுந்தராணிகி படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

அதன் பின் தற்போது `தசரா´ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார்,பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன்.

இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்.

தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

Exit mobile version