நடுக்கடலில் தவிக்க விட்ட மாலுமி!! நீந்தியே கரைக்கு திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!!
சீனாவின் ஹைனான் பகுதியில் டைவிங் செய்வதற்காக நடுக்கடலுக்கு சென்ற மூன்று சுற்றுலாப் பயணிகளும் Zhouzai தீவு அருகே தங்களை விட்டுச் சென்ற படகை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் இரண்டு மணி நேரம் நீந்தியே கரையை அடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகமான சீனா தேசிய வானொலி தெரிவித்துள்ளது.
சீனாவின் பிற பகுதிகளிலிருந்து தீவைச் சுற்றிப்பார்க்கச் சென்ற மூவர், டைவிங் வகுப்பில் சேர்ந்தனர்.
அனைவரும் படகில் தீவுக்கு அருகில் உள்ள கடலுக்கு சென்றனர். பயிற்றுவிப்பாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரிவு ஆழமாக இல்லை. எனவே படகின் மாலுமியின் உதவியுடன் ஆழமாகச் சென்றனர்.
பயிற்றுவிப்பாளர் மாலுமியிடம் 2 மணி நேரம் கழித்து அவர்களை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் படகு வரவில்லை. மேலும் 2 மணி நேரம் முடிந்தது. சூரியன் மறையும் நேரம் வந்துவிட்டது. மாலுமி தங்களை மறந்துவிட்டதை உணர்ந்த சுற்றுலா வழிகாட்டிகளும் பயிற்றுவிப்பாளர்களும் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீந்தியே கரையை வந்தடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சுற்றுலா பயணிகளில் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவமானது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
விசாரணையில் பயிற்றுவிப்பாளரிடம் டைவிங் கற்று கொடுப்பதற்கான முறையான உரிமம் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட 2 நிறுவனங்களுக்கும், பயிற்றுவிப்பாளருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
Follow us on : click here