ஆற்றில் மாயமான பேருந்துகள்!! கிடைத்த ஒரே ஒருவரின் உடல்!! மற்றவர்களின் நிலை?

ஆற்றில் மாயமான பேருந்துகள்!! கிடைத்த ஒரே ஒருவரின் உடல்!! மற்றவர்களின் நிலை?

ஜூலை 12-ஆம் தேதி நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதில் குறைந்தது 50 பேரை காணவில்லை. ஜூலை 13 ஆம் தேதி காணாமல் போன 50 பேரில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.


விபத்து நடந்த இடத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உடலை மீட்டதாக காவல்துறை AFP – யிடம் கூறியது.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 63 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதன் எண்ணிக்கையை குறைத்து 50 பேர் காணவில்லை என மாவட்ட அதிகாரி கிமானந்தா புசல் AFP யிடம் கூறினார்.

பேருந்துகளில் பயணித்த பயணிகளின் மொத்த எண்ணிக்கையை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறினார்.ஏனென்றால் பேருந்து வரும் வழியில் நிறுத்தப்பட்டதா என்பது சரியாக தெரியவில்லை என்றும் கூறினார்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் மும்முரமாக டஜன் கணக்கான மீட்பு பணியாளர்கள் சென்சார் கருவிகள், டைவ் டீம்கள் உதவிகளுடன் காணாமல் போன பயணிகள் அல்லது வாகனங்களின் தடயங்களை பல மணி நேரம் திரிசூலி நதியில் தேடி வருகின்றனர்.

நதியின் வேகமான நீரோட்டம் மீட்பு பணியாளர்களின் முயற்சிகளுக்கு தடங்கலாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.