மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!!

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!!

மியன்மாரில் கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டியுள்ளது.

மேலும் 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதில் சுமார் 140 பேரைக் காணவில்லை.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

ஸ்கை-வில்லா எனும் கூட்டுரிமை வீடுகளின் கட்டிடம் இடிந்து விழுந்தது. 12 மாடி கட்டிடத்தின் சுமார் 6 தளங்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் 90 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

அங்கு மின்சாரம், தொலைபேசி தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தாய்லாந்து தலைநகரில் இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

நேற்று முன்தினம் மியான்மரை தாக்கிய நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளிலும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.

தாய்லாந்தின் பேங்காக்,வியட்நாம்,சீனா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நூற்றாண்டில் மியான்மரைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்க பேரழிவாக இது கருதப்படுகிறது.