`போட்டியில் எனது அனுபவம் மனவலிமையை தந்துள்ளது”-சாந்தி பெரேரா
சிங்கப்பூர்: பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தார்.
ஸ்டேட் டி பிரான்சில் நடந்த மறு தகுதிச் சுற்றில் ஏழு போட்டியாளர்களில் சாந்தி பெரேரா கடைசியாக வந்தார்.
அவர் எடுத்த நேரம் 23.45 விநாடிகள்.
மேலும் சாந்தி பெரேரா ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஒலிம்பிக் போட்டியில் வெளியேறிய சாந்தி பெரேரா,இந்த அனுபவம் நான் எதிர்பார்த்தது போல் இல்லை என்று கூறியுள்ளார்.
ஜூலை மாதம் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பெரேரா இரட்டை வேகத்தில் சாதனை படைத்தார்.மேலும் மே மாதம் நடந்த SEA விளையாட்டுப் போட்டிகளில் 100மீ மற்றும் 200மீ போட்டிகளில் வென்ற முதல் சிங்கப்பூர் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.
2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதே அவரின் அடுத்த இலக்கு என்றும் போட்டியில் காயங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்றுதான் என்று கூறியுள்ளார்.
மேலும் போட்டியில் இவர் பெற்ற அனுபவமானது அவருக்கு மன வலிமையை தந்துள்ளதாக கூறியுள்ளார்.
Follow us on : click here