Latest Tamil News Online

சிங்கப்பூர் நகர்மன்றச் சேவை அலுவலகம் எச்சரிக்கை!

நகர்மன்றச் சேவை அலுவலகம் சிங்கப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது. போலியான QR குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக பிளாக்குகளில் அறிவிப்பு பலகைகள் ஒட்டப்பட்டிருக்கும்.அதில்,QR குறியீடு இருக்கும். குடியிருப்பு பேட்டைகளைப் பற்றி பதிவு செய்ய குறியீடுகளை பயன்படுத்துமாறு பலகைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.இதில் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யுமாறு கேட்கப்படும். குடியிருப்பாளர்கள் தம்முடைய கருத்தை பதிவு செய்வதற்கென இணையதளம் இருக்கின்றது.One Service Lite என்ற சேவையின் குறியீடு போல் போலியான குறியீடுகளும் இருக்கும்.

நகர்மன்றச் சேவை அலுவலகம் தேசிய வளர்ச்சியை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. போலி அறிவிப்புகள் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் உள்ள West Edge, West Tera ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய போலியான அறிவிப்பு பலகைகளை உடனடியாக அகற்றுவதற்கு நகர்மன்றச் சேவை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இத்தகையப் போலியான அறிவிப்பு பலகைகளைப் பார்த்து சிங்கப்பூர் மக்கள் ஏமாந்து விடாதீர்கள்! எச்சரிக்கையுடன் இருங்கள்!என்றும் நகர்மன்றச் சேவை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.