மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்...!!!
இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது.
மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிக்க கண்காணிப்பு கருவிகள் பொருத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதிய கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தூசி பறக்காமல் இருக்க தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசிய காரணங்களுக்காக வெளியே செல்வோர் முக கவசத்தை அணிந்து வெளியே செல்லுமாறு கூறப்பட்டது.
Follow us on : click here