முகப்பரு மற்றும் எண்ணெய் பசைக்கு குட்பை சொல்லும் முல்தானி மெட்டி..!!!

முகப்பரு மற்றும் எண்ணெய் பசைக்கு குட்பை சொல்லும் முல்தானி மெட்டி..!!!

வெயில்காலத்தில் முகமானது எண்ணெய் வழிந்து காணப்படும்.முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தால், பருக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.இது தவிர முகத்தில் அழுக்குகள் தேங்கி முகத்தின் பளபளப்பு குறையும்.எனவே முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அழகு குறிப்புகளைப் பின்பற்றி பயனடையலாம்.

முல்தானி மெட்டி எண்ணெய் பசையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முகத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்கி, முகம் நாள் முழுவதும் பொலிவுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

✨️ முல்தானி மெட்டி பவுடர் – ஒரு டீஸ்பூன்

✨️ ரோஸ் வாட்டர் – ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:

👉 ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி முல்தானிமெட்டியை எடுத்துக் கொள்ளவும்.

👉 அதனுடன் ஒன்றரை தேக்கரண்டி ரோஸ் வாட்டரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

👉 இந்தக் கலவையை நன்றாகக் கலந்து, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் ஸ்க்ரப் செய்யவும்.

👉 அதன் பிறகு, உங்கள் முகத்தை 10 நிமிடங்கள் உலர வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.முல்தானி மெட்டி எண்ணெயை உறிஞ்சி பருக்கள் மற்றும் அழுக்குகள் உருவாவதைத் தடுக்கிறது.

தேவையான பொருட்கள்:

✨️ முல்தானி மெட்டி தூள் – ஒரு டீஸ்பூன்

✨️ மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

✨️ ரோஸ் வாட்டர் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை:

👉 ஒரு பாத்திரத்தில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்துக்கொண்டு அதனுடன் மஞ்சள் தூளை கலக்கவும்.

👉 பின்னர் அதனுடன் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

👉 பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் உலர விடவும்.

இப்படிச் செய்வதால் முகத்தில் எண்ணெய் பசை உருவாவது தடுக்கப்படும். மேலும் முகத்தில் முகப்பரு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

முல்தானி மெட்டிப் பொடியுடன் சிறிதளவு சந்தனப் பொடியை கலந்து தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.