ஆப்பிரிக்காவில் mpox நோயால் சுமார் 1,100 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த தகவலை ஆப்பிரிக்க யூனியனின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோயின் தீவிரம் அதிகரித்து வருவதாகவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நோய் கட்டுப்பாட்டை மீறும் என எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆப்பிரிக்காவில் 42,000 mpox வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் தெரிவித்துள்ளது.
mpox நோய் சம்பவங்கள் முதல் முறையாக ஸாம்பியா மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் mpox நோய் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
இந்த ஆண்டு 18 ஆப்பிரிக்க நாடுகளில் Mpox நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது.
நோய் பரவலால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் mpox ஐ எதிர்த்துப் போராட உடனடியாக சர்வதேச நிதியுதவிக்கு அழைப்பு விடுத்துள்ளன.