சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!!

சிறுமியை கொடுமைப்படுத்திய தாய்!! புகார் அளித்த பள்ளி நிர்வாகம்!!

மலேசியாவின் ஜொகூரில் தனது 10 வயது மகள் மீது வெந்நீரை ஊற்றிய 32 வயது தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் இருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்தது.

மேலும் தொடர்ந்து சிறுமியை பரிசோதித்ததில் அவரது கால்களில் தீக்காயங்களும், கன்னத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருப்பது தெரியவந்தது.

காயங்கள் குறித்து சிறுமியிடம் கேட்கப்பட்டதில் விவரம் வெளிவந்துள்ளது.

இதனால் பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது.

இதனால் அந்தச் சிறுமி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த நவம்பர் 26ம் தேதி சிறுமி வீட்டில் துன்புறுத்தப்பட்டது உறுதியானது.