காலை நேர சிந்தனை!! எது வெற்றி!!
காலை நேர சிந்தனை
( 25.07.2024)
எது வெற்றி!!!
வெற்றி தரும் மகிழ்ச்சி
4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
22 வயதில், பட்டதாரியாக பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக் கொள்ள முடியுமானால், அது வெற்றி !
35 வயதில், போதுமான அளவு சம்பாதிக்க முடியுமானால், அது வெற்றி !
45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தக்க வைக்க முடியுமானால், அது வெற்றி !
50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
55 வயதில், நம் கடமைகளைத் தொடர்ந்து சரியாகச் செய்ய முடியுமானால், அது வெற்றி !
60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
Be defeated to become victoriuos.
தோற்றுப் போனால்
வெற்றி கிடைக்குமா ?
அம்மாவிடம் தோற்றுப் போ,
அன்பு அதிகரிக்கும்..
அப்பாவிடம் தோற்றுப் போ,
அறிவு மேம்படும்..
துணையிடம் தோற்றுப் போ,
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
பிள்ளையிடம் தோற்றுப் போ,
பாசம் பன்மடங்காகும்..
சொந்தங்களிடம் தோற்றுப் போ, உறவு பலப்படும்..
நண்பனிடம் தோற்றுப் போ,
நட்பு உறுதிப்படும்..
ஆகவே தோற்றுப் போ,
தோற்றுப் போனால் வெற்றி கிடைக்கும்
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்…
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥சிவம்
Follow us on : click here
.