சிங்கப்பூரில் நர்சிங் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பா?

சிங்கப்பூரில் நர்சிங் துறையில் கூடுதல் வேலை வாய்ப்பா?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதார அமைச்சகம் இது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

வரும் மாதங்களில் மூன்று உயர்கல்வி நிலையங்களில் நர்சிங் படிப்பில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க உள்ளன.

நர்சிங் துறையில் அதிக அளவிலான சிங்கப்பூரர்கள் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

பட்டம் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மூன்று உயர்கல்வி நிலையங்களில் அதிக இடங்கள் இருக்கும்.

நோய் வருவதற்கு முன்பே தடுப்பது சிங்கப்பூரின் முக்கிய உத்தி என்றும், இது சுகாதார துறையில் முக்கிய அம்சம் என்றும் அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

அடிப்படை வசதிகளை வழங்குவதிலும்,கூடுதலான செவிலியர்களுக்கு பயிற்சியளிப்பதும் இன்றும் மிகவும் முக்கியமானதாகி வருவதாக அமைச்சர் கூறினார்.

பான் பசிபிக் சிங்கப்பூரில் இன்று 150 செவிலியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

செவிலியர்களுக்கான தகுதி விருதானது 1976 இல் துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி செவிலியர் துறையில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் வகையில் விருது வழங்குகிறது.