சிங்கப்பூரில் மேலும் கடற்கரைகள் மூடல்!! காரணம் என்ன?
St john’s,Lazarus,Kusu தீவுகளில் உள்ள கடற்கரைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
St john’s , Lazarus தீவுகளில் உள்ள கடற்கரையில் எண்ணெய் படலங்கள் காணப்பட்டன.
ஜூன் 14-ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே நகராமல் நின்று கொண்டிருந்த கப்பல் மீது கனரக கப்பல் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது .
நகராமல் நின்று கொண்டிருந்த கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்தது. இதுவே கடற்கரைகளில் எண்ணெய் படலங்கள் காணப்பட்டதற்கான கரணம்.
நேற்று காலை St john’s,Lazarus, தீவுகளில் உள்ள கடற்கரைகளின் நிலைமையை மதிப்பிடுவதற்காக தன்னார்வலர்கள் சென்றனர்.
அதனை அடுத்து இந்த முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தோசா கடற்கரைகளில் மக்கள் பார்வையிடலாம். அனால் கடலில் நீச்சல் அடிக்கவோ அல்லது வேறு எந்த கடல் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதி கிடையாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
கடல்துறை,துறைமுக ஆணையம், தேசியச் சுற்றுப்புற அமைப்பு,தேசியப் பூங்காக் கழகம் மற்றும் செந்தோசா வளர்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
Follow us on : click here