சிங்கப்பூரில் கருக்குழாய் வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும். இந்த வகையான புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டாய் நிலையாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாண்டு சரிவுக்குப் பிறகு நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
வழக்கமான மருத்துவ பரிசோதனை மூலம் இதன் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த புற்றுநோய்க்கு பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். பெண்களிடம் மட்டுமே இந்த வகையான புற்றுநோய் காணப்படும்.
இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் 200 க்கும் மேற்பட்ட பெண்களிடம் கண்டறியப்படுகிறது. இவ்வாறு Singhealth குழுமம் கூறியது.
HPV என்ற கிருமி வகையே இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.இது போன்ற புற்றுநோய் பாலுறவு மூலம் தொற்றிக் கொள்ளும் HPV கிருமி வகையைச் சார்ந்தது.
இந்த தொற்றுக்கு அறிகுறிகள் தென்படாது. இதனால் பெண்கள் சுகாதார பரிசோதனை செய்வது முக்கியம் என்று மருத்துவர்கள் கூறினர். ஆரம்பத்திலேயே தொற்றை கண்டறிந்து அதனை புற்றுநோயாக உருவாகாமல் தடுக்கலாம். இதனைப் பலர் கண்டுகொள்ளாமல் விடுவதால் அவர்கள் புற்று நோய் தொற்றால் அவதிப்படுகின்றனர்.
HPV தொற்றுக்கென தடுப்பூசி உண்டு. அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டால் 90 விழுக்காடு வரை பாதுகாப்பு அளிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்
கடந்த 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு கருக்குழாய் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை என்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்தார். சிங்கப்பூர் பெண்கள் இதனை அலட்சியமாக நினைத்து வழக்கமான பரிசோதனை செய்யாமல் இருப்பது காரணம் என்றும் கூறினார்.
பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் HPV தடுப்பூசியை போட்டுக் கொள்வது நல்லது என்றும் மருத்துவர் கூறினார்.