அடுக்குமாடி குடியிருப்பில் ஓர் வீட்டின் பால்கனிக்கு அழையா விருந்தாளியாக வந்த உடும்பு!!
பொங்கோல் குடியிருப்பு பகுதியில் பதினோராவது மாடியில் வசிக்கும் ஜெஃப்ரி டோவின் வீட்டின் பால்கனியில் அழையா விருந்தாளியாக வந்த மானிட்டர் பல்லியை பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.
இது 20 சென்டிமீட்டர் முதல் மூன்று மீட்டர் அதாவது பத்தடி வரை வளரும் இதன் எடை 70 கிலோகிராம் 150 பவுண்ட்.
இதன் ஆயூட்காலம் தோராயமாக 30 ஆண்டுகள்.
இந்த உடும்பை கண்டதும் டோவின் குடும்பத்தினர் துடைப்பத்தால் அதனை விரட்டினர்.
அதை ஸ்லைடிங் டோர் இருக்கும் பகுதிக்குள் சிக்க வைத்தனர்.
மேலும் டோ அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.அப்போது மாலை சுமார் 5 மணியளவில் அவரது வீட்டு இல்லப் பணிப்பெண் மூலம் அழைப்பு வந்தது.
வீட்டில் மானிட்டர் பல்லி எனப்படும் உடும்பு இருப்பதை அவரிடம் கூறினார்.
வீட்டுக்கு விரைந்த அவர் உதவிக்காக அதே பிளாக்கில் வசிக்கும் தனது தந்தையை உதவிக்காக தொடர்பு கொண்டார்.
மேலும் அக்கம் பக்கத்தினரும் உதவ முன்வந்தனர்.
டோ காவல்துறையை அணுகினார்.
காவல்துறை அதிகாரிகள் விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தை அணுகுமாறு ஆலோசனை கூறினர்.
டோ தேசிய பூங்கா வாரியத்தை தொடர்பு கொண்டார்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து இரண்டு பேர் கொண்ட குழு வந்தனர்.
இடுக்கி மற்றும் போர்வைகளை பயன்படுத்தி உடம்பை பிடித்துச் சென்றனர் .
வாட்டர்வே டெரஸ் II குடியிருப்பாளர்களின் முகநூல் பக்கத்தில் இச்சம்பவம் குறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
Follow us on : click here