Singapore News in Tamil

பணம்!

“பணம்´´ இன்றைய வாழ்க்கையில் எல்லோராலையும் தவிர்க்க முடியாத ஒன்று.அதற்கு எத்தனை பெயர்கள் இருக்கிறது? என்பது உங்களுக்கு தெரியுமா?வாருங்கள் அதைப் பற்றி சிறு தகவல்களைத் தெரிந்து கொள்வோம்……

இந்த #பணத்தை கையில பிடிச்சி, கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா…அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு #பெயர்கள்…

கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்…

யாசிப்பவருக்குக் கொடுத்தால் #பிச்சை என்றும்…

அர்ச்சகருக்குக் கொடுத்தால் #தட்சணை என்றும்…

கல்விக் கூடங்களில் #கட்டணம் என்றும்…

திருமணத்தில் #வரதட்சணை என்றும்…

திருமண விலக்கில் #ஜீவனாம்சம் என்றும்…

விபத்துகளில் இறந்தால் #நஷ்டஈடு என்றும்…

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்#தர்மம் என்றும்…

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் #தானம் என்றும்…

திருமண வீடுகளில் பரிசாக #மொய் என்றும்…

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது #கடன் என்றும்…

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது #அன்பளிப்பு என்றும்…

விரும்பிக் கொடுத்தால் #நன்கொடை என்றும்…

நீதிமன்றத்தில் செலுத்தினால் #அபராதம் என்றும்…

அரசுக்குச் செலுத்தினால் #வரி என்றும்…

அரசுப் பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது #நிதி என்றும்…

செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம் என்றும்…

தினமும் கிடைப்பது #கூலி என்றும்…

பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம் என்றும்…

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் #லஞ்சம் என்றும்…

கடன் வாங்கினால் அத்தொகைக்கு#அசல் என்றும்…

வாங்கியக் கடனுக்குக் கொடுக்கும் போது #வட்டி என்றும்…

தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு #முதலீடு என்றும்…

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #இலாபம் என்றும்…

குரு-வுக்குக் கொடுக்கும் போது #குருதட்சணை என்றும்…

ஹோட்டலில் நல்குவது #டிப்ஸ் என்றும்…

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் #பணத்திற்கு மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை…

இந்தப் பணம் என்ற காகிதத்தைப் பெற…

சிலர் அன்பை இழக்கின்றனர்…

சிலர் பண்பை இழக்கின்றனர்…

சிலர் நட்புகளை இழக்கின்றனர்…

சிலர் உறவுகளை இழக்கின்றனர்…

சிலர் கற்பை இழக்கின்றனர்…

சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்…

சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்…

சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்…

சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்…

சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்…

💵☺😎