நடப்பு ஆண்டின் முதல் பாதியில் அதிகப்படியான விபத்துக்கள் மற்றும் மரணங்கள் உற்பத்தித் துறையில் நடந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. அதிலும் உணவு தயாரிப்பு நிறுவனங்களில் உள்ள உணவு உற்பத்தி துறையில் பாதுகாப்பு மிக மோசமாக உள்ளதாக கூறியது.
அதற்கு காரணம் , பணியாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு வழங்கப்படாமல் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. ஊழியர்களுக்கான தேவையான அடிப்படை பாதுகாப்பு இல்லை,பாதுகாப்பு சட்டங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
எனவே இந்த அதிகப்படியான விபத்துக்கள் மற்றும் பேரிடர்களை தடுக்கும் வகையில் உற்பத்தித் துறை பணியிட பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சோதனையை வலுப்படுத்த உள்ளதாக MOM தெரிவித்துள்ளது.
மேலும் உற்பத்தித் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ; தனிமனித பாதுகாப்பு விதிமுறைகள் , இயந்திரங்களை முறையாக இயக்குதல் , விபத்து கால முதலுதவி நடவடிக்கை போன்றவற்றை அந்தந்த நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுப்பது அவசியம் எனவும் கூறியது.
இதை தவறும் பட்சத்தில் அந்த நிறுவனத்திருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தல் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.