ஜனவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் கேபின்சினா வனப்பகுதிக்குள் நுழைந்தவர் இரவு 7.15 மணி வரைத் திரும்ப வரவில்லை. இவ்வாறு சபா வனத்துறை அலுவலகம் கூறியது.
இதனை அடுத்து சண்டர்கன் வனத்துறைக்கு அதைப் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன சுற்றுலா பயணி 55 வயது உடையவர் என்று The Star நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது.அவர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.
சண்டர்கன் வனத்துறை ஊழியர்கள் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு தேடலில் ஈடுபட்டது. காணாமல் போன சுற்றுலா பயணி சமூக ஊடகங்களில் பதிவிட்ட தகவலைத் தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் பதற்றத்துடனும், அச்சத்துடன் காணப்பட்டதாக தெரிவித்தனர். இதைப் பற்றி உறுதி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளது.