சிங்கப்பூரில் அக்டோபர் 22-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10.25 மணியளவில் செந்தோசா தீவின் கடற்கரையில் கயாக் படகோட்டி ஒருவர் காணாமல் போனதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக கூறியது.
காணாமல் போனவரை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியது.
அவரை தேடும் பணியில் SCDF யின் மரைன் மீட்புக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் பேரிடர் உதவி மற்றும் மீட்பு குழுவின் Divers அவரை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக SCDF கூறியது.
சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுகம் ஆணையத்திற்கு காணாமல் போனவர் குறித்த தகவல் ஏறக்குறைய அதே நேரத்தில் தெரிய வந்ததாக தெரிவித்தது.
அவரை தேடும் பணியில் சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுகம் ஆணையம், குடிமை தற்காப்பு படை ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியது.
இந்த சம்பவம் குறித்து அருகிலுள்ள கப்பல்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது.