சிங்கப்பூரில் ஏப்ரல் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் முழுநேர தேசிய சேவையாளர், புலாவ் உபினில் அவர் பணியில் இல்லாதபோது காணாமல் போனார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையும் ஈடுபட்டனர்.
அவரின் சடலம் புலாவ் உபினின் வடக்குப் பகுதியில் கெகெக் குவாரியில் கண்டெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தண்ணீரில் உடல் மிதப்பதைக் கண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை கூறியது.
அதன்பின், உடலை மீட்டனர்.
Tampines தீயணைப்பு நிலையத்தில் SCDF தீயணைப்பு வீரராக இருந்த NSF யின் உடல் பரிசோதிக்கப்பட்டது. அவர் இறந்துவிட்டதாக துணை மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.
“ஆரம்பகட்ட விசாரணையில், அவருடைய இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என காவல்துறை கூறியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.
சனிக்கிழமை இரவு 2.10 மணியளவில் SCDF கெகெக் குவாரிக்கு சென்றனர். ஆனால், NSF இருந்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று கூறியது.
அவரை தேடுவதற்காக தீயணைப்பு வீரர்களை அனுப்பியது.
மீட்புக் குழுவின் (DART) மீட்பு பணியாளர்களும் மற்றும் பேரிடர் உதவியாளர்களும் நீருக்கடியில் இயக்கப்படும் தொலைதூர வாகனத்தைப் பயன்படுத்தினர்.
இந்த வாகனம் நீருக்கடியில் நிலப்பரப்பை கண்டறிவதற்கு சோனார் – இமெஜிங் கருவியை பயன்படுத்தும்.
இது டைவர்ஸ் ஆபத்தை குறைக்கிறது.