மனிதவள அமைச்சகம் அதன் ஆய்வு மற்றும் தணிக்கை நடவடிக்கைகளை அடுத்த இரண்டு மாதங்களில் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த மே 31-ஆம் தேதி அன்று அதன் உயர் பாதுகாப்பு காலம் முடிவடைந்தது.
நிறுவனங்கள் பாதுகாப்பு வீதிமீறல்களை மீறியிருப்பது ,கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் நிர்வாக முறை தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறியது.
புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அறிமுகமான சில நடவடிக்கைகள் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.
விபத்துகள் பெரும்பாலும் கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் அதிகம் ஏற்படும் என்று கூறியது.மனிதவள அமைச்சகத்தின் அதிகாரிகள் கட்டுமான தளங்களில் பாதுகாப்பு விதிமீறல்களைக் கண்டுபிடிப்பதாகவும் கூறியது.
உயர் பாதுகாப்பு காலம்,செப்டம்பர் 2022-ஆம் ஆண்டில் வேலையிட இறப்புகள் அதிகரித்தபோது நடைமுறைக்கு வந்தது.