உலக நல்வாழ்வு தினத்தில் மனநல ஆரோக்கியம் குறித்து பேசினார் அமைச்சர் இந்திராணி!!
மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் மனநலமும் முக்கியம். மனம் ஆரோக்கியமாக இருந்தால் ஒருவரின் உடல் உறுப்புகளின் செயல்பாடும் சீரானதாக இருக்கும்.சிறந்த மனநலம் இருந்தால் சுயமதிப்பும் தன்னம்பிக்கையும் இருப்பதாக உணர்வர். நல்ல மனநலம் கொண்டவருக்கு சிறந்த உறவுகளை வளர்க்கவும் அவர்களின் மூலம் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளிக்கும் அளவிற்கு தைரியமும் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து அழுத்தங்களை கையாண்டு திறமையுடன் செயல்பட வேண்டும்.மன ஆரோக்கியம் என்பது மக்கள் ஆக்கப்பூர்வமாகவும் பலனளிக்கும் வகையிலும் உழைத்து தங்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் நல்வாழ்வின் நிலை. இவ்வாறு மன ஆரோக்கியம் என்பது நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சமூகம் வேகமாக முன்னேறி வருவதால் மனநலம் முன்பை விட இப்போது மிகவும் முக்கியமானது என்று இரண்டாம் தேசிய வளர்ச்சித்துறை அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார்.
உலக ஆரோக்கிய தினமான நேற்று (ஜூன் 8) உடல் ஆரோக்கியத்தை பற்றி கூறினார்.
நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த சிறிது நேரம் ஓய்வெடுப்பது அவசியம் என்று கூறினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் ஒலியின் வழி சிகிச்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சிகிச்சையானது இசைக்கருவிகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவியது.
கன்டோன்மென்ட் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
தொழில்நுட்பம் நிறைய மாறுகிறது; மக்கள் எப்போதும் இணையத்தில் இருக்கிறார்கள்; இது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியாக இருப்பது அவசியம் என மனநல ஆரோக்கியம் குறித்து அவர் பேசியுள்ளார்.
Follow us on : click here