சிங்கப்பூரின் பிரபல காலை உணவுகளை பொம்மை வடிவில் வெளியிடும் மைலோ…!!!

சிங்கப்பூரின் பிரபல காலை உணவுகளை பொம்மை வடிவில் வெளியிடும் மைலோ...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிரபல காலை உணவு வகைகளை மைலோ பொம்மை வடிவில் வெளியிடுகிறது.

காலை உணவைப் பொறுத்தவரை, சிங்கப்பூரர்களின் வாழ்வில் மைலோ ஒரு முக்கிய அங்கமாக உள்ளதாக நிறுவனத்தின் வர்த்தக மேலாளர் கூறினார்.

சிங்கப்பூரில் அதன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் மைலோ இந்த பொம்மைகளை அறிமுகப்படுத்துகிறது.

அவை இன்று (ஏப்ரல் 26) விற்பனைக்கு வருகின்றன.

காயா டோஸ்ட், முட்டை, மைலோ பானங்கள், மைலோ பக்கெட்டுகள் மற்றும் பன்கள் உள்ளிட்ட பல பொம்மைகள் உள்ளன.

பொம்மைகளைப் பெற விரும்புவோர் மைலோ 3-இன்-1 அல்லது மைலோ காவ் சியூ டாய் போன்ற பொட்டலங்களை வாங்கலாம்.

அந்தப் பொட்டலங்களில் ஏதேனும் ஒன்றில் பொம்மை இருக்கலாம்.

சிங்கப்பூரின் பிரத்யேக வாழ்க்கை முறையை பொம்மைகள் பிரதிபலிக்கின்றன.

இந்த பொம்மைகள் FairPrice, Cold Storage, Giant, Sheng Shiong, Prime போன்ற கடைகளில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்தோடு மைலோ உணவுகளை வாங்கிச் செல்கின்றனர்.

FOLLOW US ON MORE :