கடலில் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர்களுக்கு நேரும் கதி!! இரண்டாவது முறையாக நடந்த சம்பவம்!!

கடலில் பயணிக்கும் புலம்பெயர்ந்தோர்களுக்கு நேரும் கதி!! இரண்டாவது முறையாக நடந்த சம்பவம்!!

குழந்தைகள் உட்பட 77 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஜிபூட்டி கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்லானது.

இரண்டு வாரங்களில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

இந்த சோகத்தில் 21 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 23 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் 33 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏமனில் இருந்து ஜிபூட்டிக்கு படகு சென்று கொண்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பெரும்பான்மையானவர்கள் வளைகுடா நாடுகளில் வேலை தேடும் எத்தியோப்பியன் குடியேறியவர்கள்.