சிங்கப்பூரில் Kranji Way இல் உள்ள தங்குமிடத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் வேலை முடிந்து பிறகு தங்குமிடத்திற்கு செல்ல லாரி மூலம் பயணம் செய்கின்றனர். அது லாரி ஓட்டுநர்களால் சட்டவிரோதமாக வழங்கப்படும் போக்குவரத்து சேவை.
Kranji MRT நிலையத்திலிருந்து அவர்களின் தங்குமிடத்திற்கு செல்ல சுமார் 4 கி.மீ பயணிக்க வேண்டும். அங்கு பேருந்து சேவைகள் இல்லாததால் லாரியின் மூலம் பயணிக்கின்றனர்.இது போன்ற நிலையை ஞாயிற்றுகிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் சந்திக்க நேரிடுவதாக கூறுகின்றனர்.
அங்கு 925 மற்றும் 925m ஆகிய பேருந்து சேவைகள் இயங்கினாலும்,ஞாயிற்றுகிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 7.40 மணிக்கு அதன் சேவையை நிறுத்தி கொள்ளும். இதனால் இரவு 7.40 மணிக்கு பிறகு திரும்பும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்திற்கு செல்ல லாரியின் சேவையை நாடுகின்றனர்.
லாரி சேவைக்கு $2 கட்டணமாக கொடுத்து பயணிப்பதாகவும், அவர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் 1300 படுக்கைகளைக் கொண்ட Westlite Kranji Way தங்குமிடமும் அடங்கும்.
இது குறித்து ஒரு சில வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.
சில சமயம் MRT நிலையத்திலிருந்து தங்குமிடத்திற்கு செல்ல டாக்ஸிக்கு $10 செலுத்தி தங்குமிடத்திற்கு செல்வதாக வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கூறினார்.
லாரியில் சட்டவிரோதமாக தொழிலாளர்களை ஏற்றி செல்வது சட்டவிரோத போக்குவரத்து சேவையை வழங்குவது குற்றமாகும் என்று LTA தெரிவித்துள்ளது.
இத்தகைய குற்றத்தை முதன்முறையாக செய்பவருக்கு $1000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.