மலேசியாவில் சட்ட விரோதமான செயலை செய்து வந்துள்ள தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் வேலை அனுமதி அட்டையை போலியாக புதுப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய சட்டவிரோதமான செயலை குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்பில் செய்து வந்துள்ளனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஜொகூர் குடிவரவு துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, 13 பங்களாதேஷ் மற்றும் இந்தியன் பாஸ்போர்ட்களும், RM RM 34,983 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
பங்களாதேஷை சேர்ந்த 44 வயதுடைய நபர் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த அவரது 37 வயதுடைய மனைவி ஆகியோரிடம் சோதனை செய்தனர்.
இவ்வாண்டு இறுதியில் வேலை அனுமதி அட்டை காலாவதி ஆக உள்ளவர்களுக்கு சட்ட விரோத குடியேற்ற மறுசீரமைப்பு திட்டம் 2.0 க்கு பதிவு செய்வதற்கு சிரமத்தில் உள்ளவர்களுக்கு பதிவு செய்தல். அத்தோடு வேலை அனுமதி அட்டையை நீட்டிப்பதற்கு சிக்கல்கள் உள்ளவர்களுக்கு பதிவு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தம்பதியினர் RM 2500 முதல் RM 3000 வரை கட்டணமாக வசூலித்துள்ளதாக தெரிவித்தனர்.சோதனைக்கு பிறகு தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.
இத்தகைய மோசடிகாரர்களிடம் சிக்கி கொள்வதை தவிர்ப்பதற்கு வெளிநாட்டவர்கள் குடிவரவு அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.