முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்த வெளிநாட்டு ஊழியர்!!

முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்த வெளிநாட்டு ஊழியர்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர் தான் பணிபுரியும் வீட்டில் 27,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருடிய குற்றத்திற்காக இல்லப் பணிப்பெண்ணான டிரி அமானாவுக்கு(Tri Amanah) 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது தண்டனைக் காலமானது அவர் கைதான நாளிலிருந்து (மார்ச் 30) தொடங்கும் என நீதிமன்றம் கூறியது.

மன் பிங் சான் என்பவரின் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டாக டிரி பணி புரிந்து வந்துள்ளார்.

முதலாளி வெளியூர் சென்றதால் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி திருட்டு சம்பவத்தை இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த டிரி(33) அரங்கேற்றினார்.

அவர் தான் வேலை செய்யும் வீட்டில் $27000 மதிப்புள்ள 3 chanel கைப்பைகள்,2 மோதிரங்கள்,2 ஜோடி chanel காலணிகள் முதலியவற்றை திருடியுள்ளார்.

திருடிய பொருட்களை அவர் வெவ்வேறு கடைகளில் 7,475 வெள்ளிக்கு விற்று லாபம் பார்த்து உள்ளார்.

ஆனால் திருடிய பொருட்களின் மதிப்பானது 27,225 வெள்ளி கூறப்படுகிறது.

பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை இந்தோனேசியாவில் உள்ள தன் குடும்பத்திற்கு அனுப்பி உள்ளார். மீதி இருக்கும் பணத்தைக் வைத்து கடனை செலுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் திருடிய குற்றத்திற்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.