Latest Tamil News Online

Microsoft நிறுவனத்தில் சேவைகளில் தடங்கல்!

Microsoft நிறுவனம் சேவைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதை உலகமெங்கும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.Teams, Outlook ஆகிய சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதை விசாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனை சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் தெரிவித்தது.

கோளாறு அதன் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை நிறுவன வெளியிடவில்லை.

Downdetector என்ற இணையதளத்தில் தடங்கல் சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளது. இந்தியாவில் 3,900 க்கும் மேற்பட்ட தடங்கல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதே போல் ஜப்பானில் 900 க்கும் மேற்பட்ட தடங்கல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் குறித்து ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அரபுச் சிற்றரசு நாடுகளும் தெரிவித்துள்ளது.

சேவைத் தடங்கல் ஏற்பட்டதால் Team செயலியை பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பயனீட்டாளர்கள் தங்களுடைய தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியவில்லை.

இச்சேவைத் தடங்கலைக் குறித்து Twitter செயலியில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.