ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...!!

ஆண்களின் அழகு அவர்களின் தாடியில்தான் இருக்கிறது. உண்மையில், தாடி ஒரு ஆணுக்கு அழகான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது.

ஆனால் சில ஆண்களுக்கு தாடி வளர்ச்சி குறைவாகவோ அல்லது ஒரு சில இடங்களில் மட்டும் வளர்ந்திருக்கும்.அத்தகைய தோற்றம் கவர்ச்சி குறைவாக தெரிவது மட்டுமல்லாமல், அது அவர்களின் சுயமரியாதையையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனை உள்ள ஆண்கள் தங்களின் தாடி வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இந்த பொருட்கள் எதிர்பார்த்த பலனை தருவதில்லை.

ஆனால் இயற்கையாகவே சில பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, தாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும். இப்போது தாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

🔶️ தேங்காய் எண்ணெய் மசாஜ்

👉 ஆண்கள் தங்களின் தாடி வளர்ச்சியை அதிகரிக்க விரும்பினால்,தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்யவும்.

👉 தேங்காய் எண்ணெயுடன் ரோஸ்மேரி எண்ணெயையும் கலந்து மசாஜ் செய்யலாம்.

👉 இன்னும் சிறந்த பலன்களுக்கு, தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் ஒரு பஞ்சை நனைத்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

👉 இதை தாடியின் மீது வாரத்திற்கு 3 முறை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


🔶️ எலுமிச்சை பட்டை கலந்த கலவை

👉 எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

👉 இவை தாடியில் உள்ள பொடுகைக் குறைக்கின்றன மற்றும் பட்டை முடி மயிர்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

👉 எனவே,இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தும்போது ​​உங்கள் தாடி நன்றாக வளரும்.

👉 இதற்கு,ஒரு பாத்திரத்தில் பட்டை பொடியை எடுத்து,எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, தாடி பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

👉 பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தி வந்தால் உங்கள் தாடியானது நன்றாக வளரும்.

🔶️ வெங்காயச் சாறு

👉 வெங்காய சாறு தாடி வளர்ச்சியை ஊக்குவிக்க சிறந்தது. இதற்குக் காரணம் அதில் உள்ள அல்லிசின் ஆகும்.

👉 இந்த அல்லிசின் செல் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது.அதாவது இது வழக்கத்தை விட வேகமாகவும் அடர்த்தியாகவும் முடி வளர உதவுகிறது.

👉 இதற்கு, வெங்காயத்தை அரைத்து சாற்றைப் பிழிய வேண்டும். பின்னர் இதனுடன் சிறிது தேங்காய் எண்ணெயைச் சேர்த்து கலக்க வேண்டும்.

👉 பின்னர் அந்தக் கலவையை தாடிப் பகுதியில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் லேசான சோப்பைப் பயன்படுத்தி கழுவவும்.


🔶️ யூகலிப்டஸ் மற்றும் நல்லெண்ணெய் கலந்த கலவை

👉 சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை நல்லெண்ணெயுடன் கலந்து தாடிப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.

👉 அதன் பிறகு, 30 நிமிடங்கள் ஊற வைத்து, லேசான சோப்பைப் பயன்படுத்தி குளிர்ந்த நீரில் கழுவவும்.

👉,இப்படி தொடர்ந்து செய்து வர அழகான கரு கருவென தாடி வளரத் தொடங்கும்.