மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!!

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!!

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் தான் மேக்னா ராஜ்.

கன்னட நடிகை பிரமிளாவின் மகளான இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2009 இல் தெலுங்கு திரைப்படமான பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.2018 இல் கன்னட திரைப்படமான ‘இரவு தெல்லவ
பிட்டுவில்’ என்ற படத்திற்காக கர்நாடக மாநில திரைப்பட விருதை வென்றார். பின்பு இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இவரது கணவர் சிரஞ்சீவி சர்ஜா ஜூன் 7 2020ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தச் செய்தி திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்நிலையில் அவருக்கு அக்டோபர் 22 ,2020 இல் ராயன் ராஜ் சர்ஜா என்ற ஆண் குழந்தை பிறந்தது. ராயன் பார்ப்பதற்கு தன் தந்தை சிரஞ்சீவியை போலவே இருப்பார். இந்நிலையில் குழந்தை வளர்ப்பதில் கவனம் செலுத்திய மேக்னா ராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் கம் பேக் கொடுத்துள்ளார்.8 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார்.

சுரேஷ் கோபியின் அரசியல் படத்தில் மேக்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ​​’பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துள்ளேன். எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.உண்மையிலேயே நான் வீடு திரும்பியது போல் உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.