இணைய ஆள்மாறாட்ட மோசடிகளை குறைக்க நடவடிக்கை!!

இணைய ஆள்மாறாட்ட மோசடிகளை குறைக்க நடவடிக்கை!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏற்படும் ஆன்லைன் ஆள்மாறாட்டம் மோசடிகளை சமாளிக்க சிங்கப்பூர் குறிப்பிட்ட வழிகளை ஆராய்ந்து வருகிறது.

Deepfakes தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு மூலம் உண்மை போலவே தோற்றமளிக்கும் போலி படங்களை தயாரிக்கும்.

இதை பயன்படுத்தி குற்றவாளிகள் கூட சில நேரங்களில் தப்பி விடுகின்றனர். இதுபோன்ற ஆபத்து நிறைந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாளுவது என்று சிங்கப்பூர் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

Deepfakes ஒரு நபரின் உருவம், ஒலி அல்லது ஒளிபரப்பைக் கையாளுதல், அவர்கள் செய்யாத அல்லது சொல்லாத ஒன்றை செய்ததாகவோ அல்லது கூறியதாகவோ காட்டும்.

அதனை தடுக்க அரசு முயற்சி செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய மாநாட்டில் தகவல்,மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசபின் தியோ கூறினார்.

மேலும் தென் கொரியாவில் செயற்கை deepfakes தற்காலிக தடை விதித்ததை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

தவறான தகவல்களுக்கு எதிராக சட்டங்கள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.