சிங்கப்பூரில் மெக்டொனால்ட் நிறுவனம் கூடுதல் சுவையூட்டிகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளது…!!!

சிங்கப்பூரில் மெக்டொனால்ட் நிறுவனம் கூடுதல் சுவையூட்டிகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளது...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள மெக்டொனால்டு உணவகங்களில் கூடுதல் சுவையூட்டிகளைப் பெற இனி பணம் செலுத்தப்பட வேண்டும்.

இந்த நடைமுறையானது அடுத்த மாதம் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளர்கள் கூடுதல் கறி சாஸ் மசாலாப் பொருட்கள் போன்றவற்றை வாங்க விரும்பினால், கூடுதலாக 50 காசுகள் செலுத்த வேண்டும்.

மெக்டொனால்டு நிறுவனம், தான் வழங்கும்
உணவில் எத்தனை சுவையூட்டியை கொடுக்கும் என்ற வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.

உதாரணமாக,6 nuggets வாங்கினால் ஒரு இலவச கறி சாஸ் கிடைக்கும்.

கூடுதல் சுவையூட்டிகளை பெற விரும்பினால் வாடிக்கையாளர்கள் 50 காசு செலுத்தி அதை வாங்க வேண்டும்.

சாலட் டிரஸ்ஸிங், பான்கேக் சிரப் மற்றும் வெண்ணெய் போன்ற கூடுதல் சுவையூட்டிகளை பெற விரும்பினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

கெட்ச்அப் மற்றும் பூண்டு சில்லி சாஸ் போன்றவை தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என மெக்டொனால்டு தெரிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் உணவை வீணாக்காமல் உயரும் உணவு விலையை சமாளிக்க உதவும் என்று உணவகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாற்றத்தை வரவேற்காதவர்கள் மெக்டொனால்டு இணையதளத்தில் கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

Follow us on : click here ⬇️