ஜூலை மாதம் திருமணம்!!ரைடரைத் துரத்தி சென்ற அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!
சிங்கப்பூரில் தப்பி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை துரத்தி சென்ற போது LTA அமலாக்க அதிகாரி உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் ஜூன் 4-ஆம் தேதி காலை நடந்தது.
ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு லாரிகள் மற்றும் ஒரு வேன் சம்பந்தப்பட்ட விபத்து TPE வெளியேறும் இடத்திற்கு வழியாக BKE நோக்கி SLE இல் நேர்ந்தது.
விபத்தில் சிக்கிய அதிகாரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
உயிரிழந்த Zdulfika Ahakash அதிகாரிக்கு வயது 26. விபத்து நடந்த தினத்தன்று தவறிழைத்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பி செல்ல முயன்ற போது துரத்தி சென்று பிடிக்க அதிகாரி முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக அதிகாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இறந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலை LTA தெரிவித்தது. மேலும் அவர்களுக்கு தங்கள் ஆதரவையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தது.
இதனையடுத்து தப்பி சென்ற நபரை அதிகாரிகள் தேடி வந்தனர்.
தப்பி சென்ற 18 வயது இளைஞனை காவல்துறை கைது செய்தது.
போதைப்பொருள் சமந்தப்பட்ட குற்றங்கள், ஆயுதங்களை வைத்திருந்தது, வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்ததாக காவல்துறை தெரிவித்தது.
உயிரிழந்த அதிகாரிக்கு ஜூலை மாதம் திருமணம் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg