Singapore Breaking News in Tamil

மாரி செல்வராஜுக்கு இவ்வளவு பெரிய கட்-அவுட்டா!காரணம் என்ன?

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூன் 29(நேற்று) 2023 வெளியானது.

ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் “பரியேறும் பெருமாள்´´,“கர்ணன்´´ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும் இவரே.

அவர் சாதி கடந்த காதலையும், சாதி வேறுபாட்டை மையப்படுத்தியும் படமெடுத்திருப்பார்.

இப்படத்தில் சாதி அரசியலை மையமாகக் கொண்டு படம் எடுத்துள்ளார்.

படம் வெளியான முதல் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

தேவர் மகன் பற்றிய பரபரப்பை மாரி செல்வராஜ் கிழப்பி இருந்த நிலையில் இப்படம் ரிலீசாகி உள்ளது.

படத்திற்கு பல விமர்சனங்கள் கிடைத்தாலும், வடிவேலின் நடிப்பு மிக சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நேற்று ராம் சினிமா தியேட்டரில் “ மாமன்னன்´´ ரிலீஸ் ஆனது.

மாரி செல்வராஜ் நெல்லை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர்.

அவருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அவரைக் கொண்டாடும் விதத்தில் சுமார் 80 அடி உயர்த்தில் கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர். அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கும் மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.